இணையதளத்தில் நத்தம் பட்டா காணோம்..!!

 

-MMH

          கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வருவாய்த்துறை இணையதளத்தில் நத்தம் பட்டா தொடர்பான வரைபடம் பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் சிட்டா நிலம் தொடர்பான வரைபடம் நத்தம் பட்டா வரைபடம் 'அ' பதிவேடு போன்றவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த வசதிகளை வருவாய்த்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்கனவே செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் வருவாய்த்துறை இணையதளத்திற்கு சென்று கம்ப்யூட்டர் சிட்டா, 'அ' பதிவேடு, நிலத்தின் வரைபடம் போன்றவைகளை கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து பத்திரப்பதிவுக்கும் வேளாண்துறையில் மானியம் பெறுவதற்கும் வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

இந்த வசதி வருவாய்த்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால்கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும் தாசில்தார் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் நத்தம் பட்டா வரைபடம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி மேம்படுத்தப்படவில்லை. 

இதனால் பொதுமக்கள் நத்தம் பட்டா வரைபடம் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனை தவிர்க்க வருவாய்த்துறை இணையதளத்தில் நத்தம் பட்டா வரைபடமும் பதிவிறக்கம் செய்யும் வசதியை மேம்படுத்த வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments