எப்படி இருக்கு சென்னை புத்தக கண்காட்சி!!

 

-MMH 

                             வ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில்  பொங்கல் விடுமுறையினை  ஒட்டி  நடைபெறும் "சென்னை புத்தக கண்காட்சி" உள்ளூர் மட்டுமல்ல , தமிழகம் மற்றும் வெளிநாட்டினை சார்ந்த வாசகர்களுக்கும்  , ஆராய்ச்சியாளர்களுக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் விருப்பமான  ஒன்றாகும்.

பபாசி என்னும் "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின்" சார்பாக இப்புத்தக கண்காட்சி சென்னையில்  கடந்த 43 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது ,கொரோனா எனும் தொற்றுபரவலின் காரணமாக இவ்வருடம் நிகழுமா என்ற கேள்விகளுக்கு தாமதமாக , யாரும் எதிர்பாராத பதிலாக தற்போது ( பிப் 24 - மார்ச் 9 ) வரை நடைபெறவிருக்கின்றது.

கொரோனா தளர்வின் போதே ஆங்காங்கே பல்வேறு வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் சுயமாக அமைத்த கண்காட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தாலும் பபாசிக்கென்றே ஒர் கூட்டம் காத்திருக்கவே செய்யும். அதுபோன்றே தற்பொழுதும் வாசகர்களின் வருகையினை காணமுடிகின்றது.

என்னத்தான் வழமையாக பொங்கல் விடுமுறையினை மையபடுத்தி நடத்தினாலும்  விடுமுறை தினத்தில்தான்  மக்களினுடைய வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும் .

ஆனால் அதனையெல்லாம் மழுங்கடிக்கும் விதமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று மிகவும் குறைவான மக்களையே கண்காட்சிக்கு வருகை தந்திருந்தது மிகவும் அதிர்ச்சியையும் , ஆச்சர்யர்யத்தையும் கொடுக்கவே செய்தது .

இதற்கு கொரோனா அச்சம் ஒரு புறம், அதன்மூலம் நிகழ்ந்த வேலையிழப்பு, மாதத்தின் இறுதி நாட்களில் கண்காட்சி அமைப்பு , ஜிஎஸ்டி , பணமதிப்பிழப்பு , பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு , விலைவாசி உயர்வு , அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இதன்காரணமாக மக்களினுடைய வாழ்வில் உருவான வாங்கும் திறன் குறைவு போன்ற காரணத்தினால் மக்கள் தங்கள் விருப்பமான புத்தகங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். (புத்தகங்களும் விலைகள் அதிகமாகவே இருக்கின்றது)

என்னை பொறுத்தவரை இப்புத்தக கண்காட்சி ஒரு சோதனைக்காலமாகவே கழியும் என தோன்றுகின்றது. ஒருவேளை  மக்கள் மத்தியில் உள்ள  இடர்பாடுகளும் -  நெருக்கடிகளும் வரும் ஆண்டில் குறைந்தால் இன்னும் சூடு பிடிக்கும் !

-நவாஸ்.

Comments