தேனி மாவட்டத்தில் புறவழிச்சாலை விரைவில் அமைக்க கோரிக்கை.!!

     -MMH
     தேனி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.280.50 கோடி செலவில் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழிச்சாலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம் வழியாக செல்லும் திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் குறைக்க தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க 2011 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதில், தேவதானப்பட்டி மற்றும் வீரபாண்டியை தவிர மற்ற பகுதிகளில் பணிகள் நடைபெறவில்

திட்டமிட்டபடி 2013 ஆண்டு பணி நிறைவு பெறாத நிலையில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னா், கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் ரூ.280.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புறவழிச்சாலைப்பணிகள் மீண்டும் தொடங்கின. மீண்டும் பணிகள் தொடங்கி ஓராண்டைக் கடந்த போதிலும் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெறுகிறது.

இதனால், உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், தேனி, பெரியகுளம் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, தேனி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் புறவழிசாலைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக், தேனி. 

Comments