உருமாறிய கொரோனாவில் இது தான் ஆபத்தான வைரஸ்!! - இது உடலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும் தெரியுமா?

     -MMH

கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், உருமாறி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், E484K என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் லண்டனில் 6 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்களில் இது தான் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஒருவரின் உடலுக்குள் இந்த வைரஸ் சென்றால், அவரது உள்ள நோயெதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதை இந்த வைரஸ் தடுத்துவிடுமாம்.. மேலும் மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் டி செல்களால் கூட இந்த வைரஸை அடையாளம் காண முடியாதாம்..அவை உடலில் பல்கி பெருகிய பிறகு தான் நமது உடல் அடையாள காண முடியும். ஆனால் அதற்குள் நமது உடலில் பல பாதிப்புகளை அந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கும். இதனால் அந்த வைரஸை எதிர்த்து சண்டையிட முடியாத நிலை உருவாகி, மரணம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது.

இந்த வகை ஆபத்தான கொரோனா வைரஸ் உறுதியான 7 பேர், லண்டனுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் தவறான தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார். இதனால் அவரை தேடும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்ட நிலையில், தானாக முன் வந்த அவர் தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வைரஸ் வேறு யாருக்காவது பரவியுள்ளதாக என்பதை கண்டறிய அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

 கிரி, ஈஷா .

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments