கோவையை சேர்ந்த தொழிலதிபர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு!!

     -MMH
      கோவையில் தனது காருடன் நகை, பணம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்ற வழக்கறிஞரிடமிருந்து காரை மீட்டு தருமாறும், இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். 

கோவையை அடுத்த பட்டணம் புதூர்,பகுதியை சேர்ந்தவர் அய்யாவு.தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் இவர்,காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது காரை வழக்கறிஞர் ஒருவர் தனது அனுமதியில்லாமல், எடுத்து சென்றுள்ளதாகவும், மேலும் காரினுள் ஐந்து பவுன் நகை மற்றும் ரூபாய் 53,500 பணமும் இருந்ததாகவும், இதனை தமக்கு மீட்டு தர வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், தாம் கடந்து 2019 ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா வங்கியில் கார் வாங்குவதற்கு நிதி பெற்றதாகவும் கடந்த கால கட்டத்தில் அரசு வழங்கிய ஆறு மாத சம்பளம் தவிர அனைத்து தவறுகளையும் செலுத்துவதாகவும் இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கார் நிறுவனத்தில் நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணாத அதிர்ச்சியில் கோடக் மகேந்திரா வங்கி நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பதற்காக அழைத்தபோது அவர் தம்மிடம் நிதி தவணை தொகை சரியாக செலுத்தாத காரணத்தால் காரை எடுத்து வந்துள்ளதாகவும் மீதி தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் காரை வாகனங்கள் உடைக்கும் இடத்திற்கு அனுப்பி விடுவதாக அவர் கூறினார். எனவே மீண்டும் நிலுவைத் தொகையையும் தாம் செலுத்திய பிறகும், பலமுறை காரை திரும்ப தருமாறு  கேட்டும் அவர் காரை தரவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்நிலையத்தில் தம்முடைய புகாரை சரிவர ஏற்கவில்லை எனவும் எனவே தமது காரையும் காருடன் தான் பறிகொடுத்த பணம் மற்றும் நகையை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்வதாக மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனுவை வழங்கும் போது அவருடன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹீம் உடனிருந்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments