இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டார்!!
பொள்ளாச்சி மீன்கரை சாலை அம்பராம்பாளையம் அடுத்த சுங்கம் பகுதியில் இன்று பதினோரு மணி அளவில் 3A கிழவன்புதூர் செல்லும் அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்ட சில நிமிடங்களில் அம்பராம்பாளையம் பகுதியிலிருந்து வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் பின்புறமாக மோதியது.
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டார். சத்தம் கேட்டவுடன் பேருந்து நிறுத்தப்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகிலுள்ள ஆல்வா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து ஏற்பட காரணம் என்னவென்று நாம் தேடிய பொழுது திருச்சூர் ரோட்டிலிருந்து வந்த கார் ஆனைமலை ரோட்டில் திரும்பும் நேரத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பியதால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் என்ன செய்வதென்று தெரியாமல் காரின் சைடு மிரரில் அடித்து பின்பு பேருந்தின் பின்புறம் இடித்துள்ளார்.
மேலும் கார் ஓட்டுனர் அவர் செல்லும் பாதையில் செல்லாமல் வழிமாறி செல்ல முயற்சி செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. மேலும் இந்த சுங்கம் பகுதி மூன்று முக்கிய ரோடுகள் சந்திக்கும் பகுதியாகும். மேலும் எப்பொழுதும் வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும் பகுதியாகுவும், மேலும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க இப்பகுதியில் முக்கிய நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களை சரியான பாதையில் செல்ல அறிவுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது இப்பகுதியிலுள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments