சிங்கம்புணரியில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

 

-MMH

         சிங்கம்புணரி அருகே உள்ள தெக்கூரை சேர்ந்தவர் முருகேசன்(46). அவரது மனைவி சுதா(45). இருவருக்கும் குழந்தைகள் இல்லை. முருகேசன், எஸ்.புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிக் கொண்டு, சிங்கம்புணரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி சுதா நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். முருகேசன் குடிக்கு அடிமையாக இருந்திருக்கிறார். 

எனவே, அவருக்கும் அவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாகவே வாக்குவாதமும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மேலும், முருகேசன் அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவரது மனைவியை மிரட்டி வந்திருக்கிறார். சில முயற்சிகளை சுதா தடுத்தும் இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த முருகேசன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். 

எனவே, சுதா வீட்டுக்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து சுதா வீட்டிற்குள் சென்றபோது முருகேசன் தூக்கிட்டு தொங்கி இருந்திருக்கிறார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் விரைந்து வந்த சிங்கம்புணரி காவல்துறையினர், முருகேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments