பொள்ளாச்சியில் பரபரப்பு!! பார்க்கிங் வசதி இல்லாத கட்டடங்களுக்கு சீல்..!

 

-MMH

      பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதிகளான காமராஜர் வீதி, நேரு வீதி,ரவுண்டானா உள்ளிட்ட  பகுதிகளில், வணிகப் பயன்பாட்டிற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது இந்நிலையில் இங்கு வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை என்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். இதனை அடுத்து  பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் வணிக நோக்கில் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு நேற்று  அதிரடியாக சீல் வைத்தனர் இதனால் காமராஜர் வீதி பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க  மகாலிங்கபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments