கோவைக்கு மகுடம் சூட்டிய மத்தியஅரசு!!!

 

-MMH

             நாடு தழுவிய அளவில், பொதுமக்களிடம் எடுத்த சர்வே அடிப்படையில், வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலில், ஏழாம் இடத்தை, கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. அதேநேரம், பாதுகாப்பான நகரங்கள் வரிசையில் முதலிடம் பெற்றிருக்கிறது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் துாய்மை நகரங்களை தர வரிசைப்படுத்துவதுபோல், வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலையும் வெளியிடுகிறது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, நகரங்களை மதிப்பிடுகிறது.

அவ்வகையில், 2020ல் நாடு தழுவிய அளவில், 111 நகரங்களில், 30. 2 லட்சம் மக்களிடம் கருத்தறியப்பட்டது. 18-35 வயது, 35க்கு மேல், ஆண்கள், பெண்கள் என, தனித்தனியாக பிரித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு தழுவிய அளவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரங்கள் வரிசையில், மொத்தம், 100 மதிப்பெண்ணுக்கு, 50. 52 பெற்று, 12வது இடத்தை, கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் - 4வது இடம், சேவை வழங்குவதில் - 19வது இடம், தொழில்நுட்பம் கையாள்வதில் - 23வது இடம், திட்டமிடுவதில் - 29வது இடம், நிர்வாகம் செய்வதில் - 16வது இடத்தில் கோவை உள்ளது.

வாழத்தகுதியான நகரங்கள் வரிசையில், 59. 72 மதிப்பெண் பெற்று, ஏழாமிடம் பெற்றுள்ளது, கோவை மாநகராட்சி. அதேநேரம், வாழ்க்கை தரத்தை மதிப்பிடும்போது, இரண்டாமிடம் பெற்றுள்ளது. தரமான கல்வி, மருத்துவ வசதி, வீடு, சுகாதாரம், குப்பை சேகரிப்பு, தரமான குடிநீர், பாதுகாப்பு, பொது போக்குவரத்து, பெண்களுக்கு பாதுகாப்பான இடம், காற்றின் தரம், பொருளாதார வசதி, மின் வினியோகம் உள்ளிட்ட, 21 வகையான தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், 80. 3 மதிப்பெண் பெற்றதால், 10வது இடத்தை, கோவை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக, பாதுகாப்பான நகரங்கள் வரிசையில் முதலிடம், கல்வியில், 10ம் இடம், மருத்துவம் மற்றும் வீட்டு வசதியில், 31வது இடத்தை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலில் 31, பசுமைப்பரப்பில், 42வது இடங்களை பெற்று பின்தங்கியுள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சியில் ஏழாமிடம், பொருளாதார வாய்ப்புக்கு, 12ம் இடம் பெற்றுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியின் சேவை பட்டியலில், 12வது இடமும், வாழத்தகுதியான நகரங்கள் வரிசையில், ஏழாமிடமும் கோவை பெற்றுள்ளது.

மக்களின் ஒத்துழைப்பால், அகில இந்திய அளவில், இத்தகைய ரேங்க் பெற முடிந்ததில் மகிழ்ச்சி. இதே ஒத்துழைப்பு இருந்தால், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்' என்றனர். பாஸ் மார்க்! பொருளாதாரம் - 4வது இடம்பொருளாதார வளர்ச்சி - 7 வது இடம்கல்வி - 10வது இடம்சேவை வழங்குவது - 19வது இடம்தொழில்நுட்பம் - 23வது இடம்திட்டமிடுதல் - 29வது இடம்நிர்வாகம் செய்வதில் - 16வது இடம்மருத்துவம், வீடு - 31வது இடம்சுற்றுச்சூழல் - 31வது இடம்பொருளாதார வாய்ப்பு - 12வது இடம்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீ்ப், தொண்டாமுத்தூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.Comments