பெட்ரோல் - டீசல் மீதான விடாப்பிடியான விலையேற்றம்-பணவீக்கத்தைத் தான் உருவாக்கும்?

 

-MMH

         பெட்ரோல் - டீசல் மீதான விடாபடியான விலையேற்றம் , பணவீக்கத்தைத் தான் உருவாக்கும் - பிரியங்கா கிஷோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். பாதிக்கு பாதியளவில் வரிகளை சுமத்தி விற்கபடும் பெட்ரோலின் விலையானது மும்பையில் 97.60ருபாயாகவும், டீசலானது 88.60 ருபாய்களில் விற்பனையாகின்றது.

பெட்ரோல் - டீசல் விலையினை அடிப்படையாக கொண்டே அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆகாய பயணம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது  கச்சா எண்ணெய் உடைய  விலை மாறுதலில் கூட நாம் இந்தளவிற்கு விலையேற்றத்தினை பெட்ரோல் - டீசலில் சந்தித்தது கிடையாது, அதாவது 2011ல்  பேரல் 111 டாலராக இருந்த நிலையில் 71 ருபாயாக விற்கபட்ட பெட்ரோல்,  தற்போது அதனில் பாதியாக 61 டாலர் ஆக விற்கபடும்போது பெட்ரோல் 97 ருபாயாக இருப்பது எவ்வகையில் நியாயம்!!

அத்தியாவசியமான உணவுபொருட்களின் பட்டியலிருந்து வெங்காயம் ,  புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது முதல் அதனுடைய விலையே கிலோ  50க்கும் குறைவாக இறங்கவே இல்லாத நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் விண்ணை எட்டுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் லாரிகளுக்கான வாடகையினை 30 சதவிதம் அதன் உரிமையாளர்கள் ஏற்றியிருப்பதினால் இன்னும் விலைகள் ஏறும்.இத்தகைய நெருக்கடியான சூழலிலும் மத்திய பாஜக அரசு விடாப்படியாக தினம்தினம் பெட்ரோல் - டீசல் - கேஸ் விலையினை ஏற்றிக்கொண்டு வருகின்றது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தலைவர் பிரியங்கா கிஷோர் கூறும்பொழுது  "நெருக்கடியான நிலையில் தினம் தினம்  பெட்ரோல் - டீசல் விலையினை ஏற்றுவதென்பது மக்களிடம்  பணவீக்கத்தினை மேலும் மேலும் அதிகரிகரிக்கவே செய்யுமே அன்றி விலைவாசியினை குறைக்காது!" என தெரிவித்துள்ளார்.

-நவாஸ்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments