கோவையில் அதிகரிக்கும் கொரோனா!

 

-MMH

             கோவையில், புதிதாக மூன்று இடங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரவணம்பட்டி, சூலுார், துடியலுார் ஆகிய பகுதிகளில், நேற்று மட்டும், 22 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில், சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கோவையில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. 

அதிகளவில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கண்காணிக்க தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி நடக்கிறது. அவ்வகையில், தினமும், 4,500 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

-அருண்குமார் கோவை மேற்கு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments