கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல்!! ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!!

   -MMH
சென்னை: பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுத்தியுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒருவரை கவனித்துக் கொண்டு அவருக்கு உணவு ஊட்டி விட கூட ரோபோக்கள் வந்து விட்டன.ஆனால் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய எந்திரங்கள் இல்லை.

தொழில்நுட்பம் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. விண்வெளிக்கு சர்வ சாதாரணமாக ராக்கெட்டுகளை பறக்க விட்டு கொண்டிருக்கிறது இந்தியா. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒருவரை கவனித்துக் கொண்டு அவருக்கு உணவு ஊட்டி விட கூட ரோபோக்கள் வந்து விட்டன.ஆனால் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய எந்திரங்கள் இல்லை.இன்னும் இதில் மனிதர்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதில் சிலர் இறந்தும் விடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதைத் தடை செய்யவும், இவ்வாறு சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பாதாளச் சாக்கடைகளிலும், கழிவுநீர் தொட்டிகளிலும் விஷவாயு தாக்கி பலியானோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை தொடர்கிறதா? இல்லையா என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது மனிதத் தன்மையற்ற செயல் ஆகும். எனவே மாநில அரசு இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments