கோடைக்கு தயாரான மண்பானை வியாபாரிகள்..!!

-MMH

              கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனல் தெறிக்கும் கோடை பானை விற்பனைக்கு ஆயத்தம். பொள்ளாச்சி அடுத்த  ஆவலப்பம்பட்டியில் மண்பாண்டங்கள் தயாரிப்பும் விற்பனை அதிகளவில் உள்ளது. பொங்கல் மற்றும் கோவில் திருவிழா நாட்களில் பானைகள் மற்றும் உருவார பொம்மைகள்  தீச்சட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.

நடப்பு ஆண்டுக்கான தயாரிப்புகள் கடந்த 15 நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் தற்போது வீட்டு உபயோகத்துக்கான மண்சட்டிகள் தட்டுகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரிப்பதால்  மண் பானை தயாரிப்பும் தீவிரமடைந்துள்ளது. இன்னும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. மண்பாண்ட தொழிலாளி ரங்கசாமி கூறியதாவது கோடை வெயில் காலத்தில் மண் பானை நீரை குடித்து தாகத்தை தீர்க்கலாம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும், 10 லி 15 லி  கொள்ளளவு கொண்ட மண் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

இதற்காக முன் கூட்டியே இரு வகை பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை வாடிக்கையாளர்கள் கொள்முதல் மேற்கொள்ள வரவில்லை. கோடை தீவிரமடையும் போது பானை விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மண்பாண்ட தயாரிப்பில் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க நல வாரியத்தில் இருந்து 60 வயது கடந்த தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments