இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்!!

     -MMH
      பொள்ளாச்சி மீன்கரை சாலை அம்பராம்பாளையம் தமிழ்நாடு அரிசி கடை  அருகில் இன்று காலை  இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் ஒரு வாகனம் தூள் தூளாக உடைந்தது. 

இந்த வாகனத்தை பார்க்கும் பொழுது இதில் பயணம் செய்தவரின் நிலை என்னவாக இருக்கும் என்று  சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது என்கிறார்கள் அந்த வழித்தடத்தில் பயணிப்போர். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் தப்பிய வாலிபர்கள்!!

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments