சிங்கம்புணரி அதிமுக நிர்வாகிகள் மாற்றம்!

 

-MMH

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, காலியாக உள்ள நிர்வாக இடங்களை நிரப்பும் நோக்கிலும், பரப்புரையை வேகப்படுத்தும் நோக்கிலும் சிவகங்கை மாவட்ட அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சிங்கம்புணரி வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.திருவாசகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கம்புணரி நகரச் செயலாளராக சொ.வாசு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராக காளாப்பூர் சசிகுமாரும், மாவட்ட இளைஞர் - இளம்பெண் பாசறை துணைச் செயலாளராக காளாப்பூர் விஜய்யும், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராக சிங்கம்புணரி ஒன்றியக்குழு தலைவராக உள்ள திவ்யா பிரபுவும், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளராக ஒன்றிய துணைச் சேர்மன் சரண்யாவும்,

மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளராக கிருங்காக்கோட்டை ஸ்டாலினும், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளராக எஸ்எஸ் ராஜேந்திரனும், சிங்கம்புணரி நகர MGR மன்ற செயலாளராக ரவீந்திரனும், நகர புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளராக புருஷோத்தமராஜும், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக ரமேஷும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இந்த மாற்றங்களுக்கான நியமனங்களை செய்துள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments