கோவையில் விண்வெளி உணவகம் திறப்பு!!
தமிழகத்தில் முதல் முறையாக விண்வெளியில் அமர்ந்து உணவு உண்பது போன்ற SPACE KITCHEN FOOD COURT கோவையில் துவங்கப்பட்டது. விண்வெளி தொடர்பான பல்வேறு தகவல்களும் இங்கு இடம்பெற்றதை அறிவியல் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மிராஜ் சினிமாஸ் எனும் வளாகத்தில் SPACE KITCHEN FOOD COURT எனும் விண்வெளி உணவகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில், விண்வெளியில் உள்ள பொருட்களை மாதிரிகளாக செய்து காட்சிப்படுத்தியுள்ளதோடு,விண்வெளி குறித்த ஏராளமான தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
சைனீஸ்,தாய்,மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய வகை , மற்றும் இந்திய வகை உணவுகள்,அரேபியன் வகை பார்பிக்யூ போன்ற உணவுகள்,காண்டி வகை எனப்படும் பிட்சா,பர்கர் போன்ற உணவுகள் என ,6 வகையான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் நித்யகுமார்,கூறுகையில்:-
உணவகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு விண்வெளி குறித்த முழுமையான புரிதல் ஏற்படும் விதமாக இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உணவு விடுதியில்,விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லே கேலரி, மற்றும் அப்துல்கலாமை நினைவு கூறும் வகையில் மாதிரி ராக்கெட், உடலின் வெப்பத்தை அறிந்து கொள்ள நடமாடும் ரோபோ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலேயே விண்வெளி போன்ற தோற்றத்தில் உள்ள இந்த விண்வெளி உணவகம் பொதுமக்கள் மடலடுமின்றி அறிவியல் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்ந்து வருகிறது.
- சீனி,போத்தனூர்.
Comments