சிங்கம்புணரி அருகே ரத்ததானத்தை ஊக்குவிக்கும் எஸ்.எஸ்.ஏ.கல்லூரி!
சிங்கம்புணரி அருகே தெக்கூரில் சிங்கை சித்தர் அய்யா கலைக் கல்லூரியில், நேற்று ரத்ததான முகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமாமாலினி தலைமை தாங்க, காரைக்குடி இரத்தம் மருத்துவ அதிகாரி அருள்தாஸ் துவக்கி வைத்தார்.
சிங்கம்புணரி அரசு மருத்துவமனை ஆலோசகர் மணிமாலா முன்னிலை வகித்தார். இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
40 யூனிட் அளவுக்கு ரத்த தானம் செய்யப்பட்டது. கல்லூரித்தலைவர் சந்திரசேகர் மாணவர்களை வாழ்த்தினார். மேலும், கல்லூரித்தலைவர் சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு தேக்கு மரக்கன்றுகள் கல்லூரியின் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பட்டன.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments