மீண்டும் தலையெடுக்கும் கொரோனா பரவல்!!

 

-MMH

      கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலை சமாளிப்பதற்காக போடபட்ட தொடர் ஊரடங்கானது   தமிழகமும்,  ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் மக்களையுர் நெருக்கடிக்கு உள்ளாக்கியது , சாமானியர்களும், புலம்பெயர்வு தொழிலாளர்களும் மிகப்பெரும் துயரங்களுக்கும் , முடக்கத்திற்கும் உள்ளாகினர்.  

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மக்கள் தங்களின்  அடிப்படை வாழ்விற்கு திரும்பி தங்களின் விடுபட்ட வாழ்க்கை போராட்டங்களை மீண்டும் எதிர்க்கொள்ள முயன்றுவரும் வேளையில் மீண்டும் கொரோனாவினுடைய மறு பரவல் தமிழகத்தில் அதிகரித்து வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது , கடந்த சில நாட்களாக நாள்தோரும் புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

நேற்றைய தினத்தில் மட்டும் புதிதாக 479பேர்கள் புதிய தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த பத்து நாட்களாக இருந்த தினத்தொற்றளவானது 140 என்ற அளவிலிருந்து முன்னேறி நேற்று மட்டும் 182 என புதிய அளவில் எட்டியிருகின்றது , இவ்வாறாக சென்னை நீங்கலாக பார்க்கும் பொழுது, செங்கல்பட்டு மாவட்டமானது 46ம் கோவை 42ம், திருச்சி 10ம், மதுரை 8ம் என 50815 சோதனை முடிவுகளிலிருந்து நேர்மறையான தொற்றினை இந்நகரங்கள் உறுதி செய்திருக்கின்றது .

மேலும் பாண்டிசேரியில் 8 புதிய தொற்றாளர்களை அடைந்து நேற்றுவரை 185நபர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர். தமிழகத்தில் இறப்பு என்று பார்க்கும்பொழுது நேற்றைய தினத்தில் மூவர் இறந்திருக்கின்றனர், இவர்களைவரும் 65 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது , இந்நிலையில் கொரோனா ஊரடங்கினை மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-நவாஸ்.

Comments