மாஸ்க் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை தண்டனை!!

 

-MMH

        நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்:  ''சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில், முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல், கொரோனா பரவலுக்கு வழி வகுப்போர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

-சுரேந்தர்.

Comments