சிங்கம்புணரி அருகே நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்த சப் இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டு!

 

-MMH

        சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிப்பட்டி கிராமத்தில் பாண்டியன் மகன் அன்பரசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அவர் வீட்டில் இருந்த பொழுது சுமார் 4 அடி நீளமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நல்ல பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்தார். 

அப்போது அந்த வழியாக பகல் நேர ரோந்து வந்த உலகம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் முதல் நிலை காவலர் பிரபாகரன் இருவரும் இணைந்து வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பை துணிச்சலுடன் பாதுகாப்பான முறையில் பிடித்து, மேலவண்ணாரிருப்பு வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.

பாம்பை பிடித்த காவலர்களுக்கு கட்டுக்குடிப்பட்டி ஊர் பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஓரிரு மாதங்களுக்கு முன் இதே சார்பு ஆய்வாளர் சக்திவேல் உலகம்பட்டி காவல்நிலையத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரை பாம்பைப் பிடித்தார். அந்தச் செய்தியையும் நாளைய வரலாறு இதழில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments