கோவையில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்..! விவசாயிகள் கலக்கம்!!


-MMH 

           பேரூர் வடிவேலாம்பாளையம் மலையடிவாரப்பகுதியில், ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. அப்பகுதிகளில், இரண்டு வாரங்களாக கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. அது, துரைசாமி, 45, என்பவரின் தோட்டத்தில் இருந்த ஆடுகளை கடித்து துாக்கி சென்றுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். விவசாயி துரைசாமி கூறுகையில்: விவசாயத்துடன், 50 ஆடுகளையும் வளர்த்து வருகிறேன். இரவு நேரத்தில் அடிக்கடி வரும் கருஞ்சிறுத்தை, இதுவரை நான்கு ஆடுகளை துாக்கி சென்றுள்ளது. மதுக்கரை வனத்துறையினர் காலடி தடங்களை ஆய்வு செய்து சென்றனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments