திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பலி!

 

-MMH

               திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர், கோவினிப்பட்டியை சேர்ந்த சேகர் (57). இவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

நேற்றுமுன்தினம் திருப்பத்தூரில் நடந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பின்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு வழக்கம்போல் இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் மானகிரி அருகே சாலையோரத்தில் ஒருவர் விபத்துக்கு உள்ளாகிக் கிடப்பதாக நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து பார்க்கையில் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் சேகர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

உடனே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரது சடலத்தை போலீசார் கொண்டு சென்றனர். இரவில் பணி முடிந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த விபத்து நடந்திருக்கலாம் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நாச்சியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சாலை விபத்தில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.

Comments