சுருளி அருவயில் மீண்டும் நீர்வரத்து!!

 

-MMH

              தேனி மாவட்ட வனப்பகுதியில் மழை பெய்ததால், சுருளி அருவியில் 10 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த மாா்ச். 3 ஆம் தேதி நீா்வரத்து முற்றிலும் நின்றது. மேலும் கடும் வெயிலால் அருவிக்கு நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீரூற்று ஓடைகளும் வடன.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளான, குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, சுருளிப்பட்டி, கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென கோடைமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

மேலும் சுருளி அருவிக்கு நீா்வரத்து தரும் நீரூற்றுகளில் நீா்வரத்து ஏற்பட்டு, அருவியில் வியாழக்கிழமை அதிகாலை தண்ணீா் வரத் தொடங்கியது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், கம்பம் கிழக்கு வனச்சரகத்தினா் அருவிப் பகுதியைக் கண்காணித்து வருகின்றனா்

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments