உலக உடல் பருமன் தினத்தையொட்டி சைக்கிள் விழிப்புணர்வு பயணம்..!!
உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டும், உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாடுகளை கருத்தில் கொண்டும் டாக்டர் செ. பாலமுருகன், இந்தியன் பாரியட்ரிக்ஸ், ரோட்டரி கோவை மெரிடியன்ஸ், க்ரான்ஸ்டர்ஸ் கோயம்புத்தூர் சைக்கிளிங் நிறுவனங்கள் இணைந்து இன்று காலை கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் இருந்து 50 கிலோமீட்டர் அளவில் சைக்கிள் விழிப்புணர்வு பயண நிகழ்ச்சியை நடத்தின. இதனை டாக்டர் செ. பாலமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பயணம், பொதுமக்களிடையே ஒரு நல்ல உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும், உடல் பருமனை குறைபதற்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் ஒரு எளிய உடற்பயிற்சியை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காகவும் நடத்தப்பட்டது. இந்த சைக்கிளிங் பயணத்தின் போது நிறுவனங்கள் சார்பாக மருத்துவ பாதுகாப்பு முறைகள், கை, கால், பாதுகாப்பு உரைகள், தண்ணீர், போன்ற அத்தியாவாசிய தேவைகளை பூர்த்தி செய்து இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பயணம் நடத்தப்பட்டது. இறுதியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது குறித்து டாக்டர் செ. பாலமுருகன் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு உலக உடல் பருமன் தினமாக மார்ச் 4ம் தேதி, 2021-ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. உலக உடல் பருமன் தினத்தை இந்த வருடம் “எல்லாருக்கும் எல்லாரும் தேவை” என்ற ஒரு விழிப்புணர்வு தலைப்பை கொண்டுவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு சில கோட்பாடுகளான உலக சுகாதார நிறுவனம் “உடல் பருமன் உள்ளவர்களுக்கு மரியாதை, கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் கொள்கை மாற்றம் தேவை என்று கூறி, மாற்றத்தை இயக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்றார்.
- சீனி,போத்தனூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments