கோவையில் ஒரே நாளில் 1,004 பேருக்கு கொரோனா தொற்று..!

-MMH 

      கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,004 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “கடந்த 7 நாட்கள் நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து மட்டும் 56.21 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துடியலூர் வட்டாரத்தில் 8.93 சதவீதம் பேரும், சூலூர் வட்டாரத்தில் 8.30 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்டத்தில் மொத்தம் 3.42 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 11,050 கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. 

கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, 42 தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5,029 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக மாவட்டத்தில் மொத்தம் 7,900 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 21 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

-பீர் முகமது.

Comments