பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் காரில் கடத்திய 1200 மதுபாட்டில்கள் பறிமுதல் !!

      -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் அந்த காருக்குள் சோதனை செய்தபோது, அங்கு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அந்த காருக்குள் இருந்த 1,200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிஷ்குமார் (வயது 32) என்பவரிடம் விசாரணை செய்தபோது, அந்த மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments