விசிக தொண்டர்கள் 2 பேர் அடித்துக்கொலை! அரக்கோணத்தில் பரபரப்பு!

 

-MMH

பாமகவினரால் தாக்கப்பட்டதால் விசிகவினர் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரக்கோணம் அருகே சோகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இரண்டு பேரை பாமகவினர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் அங்கம் வகிக்கும் விசிக, 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டது.

இந்நிலையில், சோகனூர் பகுதியில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது பாமகவினரால் தாக்கப்பட்ட இரண்டு விசிக தொண்டர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொலைவெறி தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏப்-10ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

-பாரூக்.

Comments