தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.. அரசின் புதிய கட்டுப்பாடுகள் இதோ!

     -MMH

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகளை மீண்டும் கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு;

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

தமிழகத்தில் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

வணிக வளாகங்கள் ஷோரூம்கள் காய்கறி கடைகள் 50% வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதி.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.

தியேட்டர்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்படும்.

-சோலை ஜெய்க்குமார்,Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments