கோவாக்சின் தடுப்பூசி அரசு மருத்துவமனைக்கு ரூ.600 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 ஆகவும் விலை!!

 

-MMH

   கோவாக்சின் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 ஆகவும் விலை நிர்ணயிக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் கோவாக்சின் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments