ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டி படுகொலை!!

    -MMH

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் முன்விரோதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவையே  உலுக்கியுள்ளது .

விஜயவாடா மாவட்டம் ஜுட்டா எனும் கிராமத்தில் உள்ள ராமாராவ் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் .ராமாராவ் மனைவி உஷா , மூத்த மகன் உதய் (வயது 2) , 2 மாத பச்சிளம் குழந்தை ஊர்நிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

 பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் ரமாதேவி மற்றும் அருணா  இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்கள் ராமராவின் ன் வேண்டுகோளுக்கிணங்க அவரது வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். 

ராமாராவுக்கு அந்த ஏரியாவில் வசித்து வரும் அப்பள ராஜூ என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. பல நாட்களாக ராமாராவை பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருந்த அப்பள ராஜூ  நேற்று முன்தினம் ராமாராவ் குடும்பத்தினருடன் செல்வதை பார்த்து விட்டு அன்று இரவே  ராமாராவ்  வீட்டிற்கு சென்றுள்ளார்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில்  அப்பள ராஜூ அனைவரையும் வெட்டிக் கொன்றுள்ளார்.

சின்ன குழந்தைகள் என்று கூட பாராமல் இரண்டு குழந்தைகளையும் வெட்டிக் கொன்றுவிட்டு அப்பள ராஜூ அரிவாளுடன் தப்பிச் சென்று விட்டார். ராமராவின் உறவினர்கள் போட்ட கூச்சல் சத்தத்தால் அருகில் இருந்த பொதுமக்கள் வந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். 

காவல்துறையினர் அப்பள ராஜூ வீட்டிற்கு  சென்று பார்க்கும் பொழுது அவர்  ரத்தக்கறையுடன் ஓரமாக சுவற்றில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவரை பிடித்த காவல்துறையினர்  அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த படுகொலையால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர் .

-V.ராஜசேகரன்.

Comments