தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்!!

   -MMH

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை, உசிலம்பட்டி பகுதிகளில் தலா நான்கு செ.மீ. மழை, ஜெயங்கொண்டம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் தலா மூன்று செ.மீ. மழை, ராமநாதபுரம், பிளவக்கல், கொடைக்கானலில் தலா 2 செ.மீ., ஆண்டிபட்டி, ஆழியார், கெட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது''. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments