கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!!

  -MMH

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75,293 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 745 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67628 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6,948 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அணஸ், V.ஹரிகிருஷ்ணன்.

Comments