கறுப்பு, சிவப்பு! அஜித்,விஜய் இருவரின் குறியீடுகள்!

 

     -MMH

நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் சில குறியீடுகள் மூலமாக தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற நடிகர் விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தாரா என்பது போன்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நடிகர்கள் விஜய், அஜித் இருவரும் சில குறியீடுகள் மூலமாக தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, வாக்களிக்க வந்த நடிகர் அஜித் கறுப்பு, சிவப்பு நிறத்திலான முகக்கவசம் அணிந்திருந்தார். அதேபோல், நடிகர் விஜய் கறுப்பு, சிவப்பு நிறத்திலான சைக்கிளில் கறுப்பு முகக்கவசம் அணிந்து வந்து வாக்களித்தார். இவர்கள் இருவரும் கறுப்பு, சிவப்பு நிறத்தை கொண்ட கட்சியை குறிக்கும் வகையில் இதுபோன்று வந்து வாக்களித்தனரா என்ற விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது.

- ராயல் ஹமீது.

Comments