கொரோணா ஊரடங்கு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

   -MMH

தமிழகத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் கொரோணா  ஊரடங்கு அமல் படுத்தப் பட்டாலும் நோய்த் தொற்றின் தீவிரம் சற்று கூட குறையவில்லை. அதனால் தலைமைச் செயலாளர் இன்று பிற்பகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்னதாக தலைமைச் செயலாளர் பிரதமருடைய ஆலோசனையில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி வருகிற 26-ஆம் தேதி அதி காலை   4 மணி முதல் தொடங்க உள்ள  இந்த கட்டுப்பாடு விவரம் பின்வருமாறு :

* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை! சிறிய கடைகள்  குளிர்சாதன வசதி இன்றி இயக்க அனுமதிக்கப்படுகின்றன. 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

* மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை!

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள் இயங்க அனுமதியில்லை.

* கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.

* சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி .

* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

* இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை

*மதுபானக் கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.

* உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் கோயில்களில் பணியாளர்கள் உரிய பூஜைகளை செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

* உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

* மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.

*தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்கப் படுகின்றனர்.

*வெளிநாடுகளிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வருபவர்கள் பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்.

டாக்ஸியில்  மூன்று பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர் .

*தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கொரோணா  பரவல் மற்றும் நோய்த் தொற்றின் தீவிரம் அறிந்து   பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைத்து பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments