மாநகராட்சி ஊழியரை மிரட்டிய விடுதி உரிமையாளர் மீது வழக்கு!!!

     -MMH
     கோவையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்த கோவை மாநகராட்சி ஊழியர்களை, தனியார் விடுதி உரிமையாளர் மிரட்டியது தொடர்பாக, ரத்தினபுரி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரத்தினபுரி போலீசார் தனியார் விடுதி உரிமையாளர் வாசகன் மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச்சொத்து சேதப்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளில், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments