மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு! பாதி எரிந்த நிலையில் உடல்கள்! பாஜக ஆளும் ம.பி.யின் அவலநிலை!

 

-MMH

         மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உள்ளது. அங்கு மரக்கட்டைகள் தட்டுப்பாடு காரணமாக, பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை, தெரு நாய்கள் கடித்துத் திண்ணும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, அங்கு உயிரிழந்த உடல்களை எரியூட்டும் மயானங்களில், மரக்கட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் சாகர் பகுதியில் உள்ள உள்ளூர் மயானங்களில் உடல்கள் முறையாக எரியூட்டப்படவில்லை என உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை தெருநாய்கள் கடித்து திண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதிபொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாதி எரிந்த நிலையில் கிடக்கும் உடல்களால், அப்பகுதிகளில் துர்நாற்றம் பரவுகிறது எனவும், இந்தச் சூழலில் கோவிட்-19 மேலும் தீவிரமாகப் பரவும் அபாயம் உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, உயிரிழப்பைக் குறைத்துக் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மயானங்களிலுள்ள உடல்களின் எண்ணிக்கையும், அரசு தரும் புள்ளி விவரங்களிலும் பெரும் மாறுபாடு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

-பாரூக்.

Comments