திமுக சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம்!!

   -MMH

கோவை மாவட்டம்:

     போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வரன் நகர் அருகில், இன்று காலை விழிப்புணர்வு முகாம் திமுக சார்பாக நடைபெற்றது. கொரோனா என்னும் கொடிய நோய் பரவி உலகெங்கும் பல உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில், தமிழ் நாட்டையும் விட்டுவைக்காத அந்த கொரோனா கோர பிடியில் இருந்து மீள வேண்டும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில். கட்சித்தலைவர்கள் ஆங்காங்கே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக போத்தனூர் செட்டிபாளையம் ரோடு பகுதியில் இன்று திமுக சார்பாக குறிச்சி நா பிரபாகரன் அவர்கள். இன்றுகபசுர குடிநீர் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவர் கூறுகையில் இந்த நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை காற்பதற்கு முககவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கைகளை சுத்தமாக கழுவியும் தங்களுடைய வீடுகளில் கிருமிநாசினிகள் போன்றவை பயன்படுத்தியும் வந்தால் நோய் பரவலை தடுக்கலாம் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கபசுரக் குடிநீர்ரை அருந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-தலைமை நிருபர் ஈசா , அனஸ்.

Comments