ஆக்சிஜன் தேவைக்கு அன்பு கரம் நீட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..!!

     -MMH
     கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் நோய்தொற்று அதிகரித்து  உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அன்றாட தேவைக்கான பொருள்கள் போல ஆக்சிஜன் சிலிண்டர்களும் விற்பனை செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. 

இந்த ஆக்சிஜன் இல்லாத நிலையில் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதில் பெரிய சிரமங்கள் ஏற்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் வலுக்கட்டாயமாக அவர்கள் வெளியே அனுப்பப்படுகின்றனர். இந்தியா முழுவதும் இந்த செய்தி பொது மக்களையும் சமூக ஆர்வலர்களையும் வெகுவாக கவலையடைய செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இதனை அறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.இந்த செய்தியை அறிந்த அவர் தானாக முன்வந்து 50000  அமெரிக்க டாலரை ஆக்சிஜன் தேவைக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 35 லட்சம் ஆகும். இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும் முதலாளிகள் தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் அதிகம் இருக்கும் நிலையில் இந்தியாவின் நிலைமையை புரிந்து கொண்டு தானாக  முன்வந்து நிதி அளித்த இவரது இந்த மனிதநேயமிக்க செயல் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்திய அளவில் இருக்கக்கூடிய மற்ற பெரும் புள்ளிகளுக்கு இது தூண்டுதலாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் அதற்கு பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வழங்கி இருக்கலாம் என்பதே அனைவரது வேண்டுகோளாகவும் கருத்தாகவும் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸின் இந்த செயலின் மூலம் இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-அன்புநிதி, ரைட் ரபீக்.

Comments

Anonymous said…
Useful information