மன்னார்குடியில் கள்ளநோட்டுகளையும், கஞ்சாவையும் கண்டுபிடித்தது காவல்துறை..!!

 

  -MMH

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த சனிக்கிழமையன்று  தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபரிடம் ரூபாய் 1.90 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து  காவல்துறையிரனரால் கைது செய்யப்பட்டார்.

மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை மகாராஜபுரம் ராஜேந்திரன் மகன் மாதவன். இவர் மீது மன்னார்குடி திருமக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மாதவன் மன்னார்குடி அடுத்த அசேசத்தில்  தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவரது அறைக்கு சனிக்கிழமை இரவு மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த சூட்கேசில் புதிய இரண்டாயிரம் பணக்கட்டும் கஞ்சா பொட்டலமும் இருந்துள்ளது.  பின்னர் மாதவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மேல் விசாரணை செய்ததில் சூட்கேசில் இருந்த ரூபாய் 1.90 லட்சம் 2000 நோட்டுகள் அனைத்தும் கள்ளப் பணம் என்பதும் 50 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்ததையும் மாதவன் ஒத்துக்கொண்டார்.

மேலும் அண்மையில் கோவை மாவட்டம் பல்லடத்தில் கள்ளப் பணத்தை புழக்கத்தில் விட்ட புகாரில் கைதாகி இருந்தவர்களிடம் தொடர்பு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மாதவனை கைது செய்து காவல்துறை ரூபாய் 1.90 லட்சம் புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டு களையும் 50 கிராம் கஞ்சா இரண்டையும் கைப்பற்றியதுடன் மாதவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பார்த்திபன் ரைட் ரபிக், ஈசா.

Comments