பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுக்கு திடீரென நெஞ்சு வலி! மருத்துவமனையில் சேர்ப்பு!!

-MMH

        தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படும்  நிலையில்  சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்  அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்:  உரிய  சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது மேலும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

-M.சுரேஷ்குமார்.

Comments