தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.!! - காவலர் கைது!!

      -MMH

     தஞ்சை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அதே காவல் நிலையத்தில் மாடியில் உள்ள அறையில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அதே காவல் நிலையத்தில் காவலராக அம்மன்பேட்டையயைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர்  பணிபுரிந்து வந்துள்ளார். அவரும் மாடியில் உள்ள மற்றொரு அறையில் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு  முருகானந்தம் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு  முருகானந்தம் அந்த பெண் காவலரை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பெண் காவலருக்கு  முருகானந்தம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து அந்தப் பெண் காவலர் உயர் அதிகாரிகளுக்கும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும்  அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். 

புகாரின் அடைப்படையில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த நிலையில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், போலீஸ்காரர் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

காவல் நிலையத்திலேயே காவலர் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக காவல்நிலையத்திற்கு செல்வதற்கே மக்கள் அஞ்சும் சூழ்நிலையில் இது போன்ற செயல்களை காவலர்கள் செய்வது பாதுகாப்பு குறித்த அச்சத்தை விதைக்கிறது  .

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்.

Comments