தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு பொதுமுடக்கம்!!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை கரணமாக, தமிழகத்தில் அரசு அறிவித்த இரவு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டுமே ஒரேநாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்தவாரம் தமிழக அரசு இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று 10 மணிக்கு இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
- V.ருக்மாங்கதன், சென்னை.
Comments