கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வாளையாறு பகுதியில் தீவிர சோதனை!!

  -MMH

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதையடுத்து தமிழக கேரள எல்லையான வாளையாறு பகுதியில் இரு மாநில போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 757 பேர்கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,  714பேர் மரணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கேரள மற்றும் தமிழ்நாடு எல்லையான வாளையாரில் இரு மாநில போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் வேலந்தாவளம் மற்றும் 14 இடங்களில் கேரள தமிழ்நாடு போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஈபாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே ண அனுமதிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், ஈசா.

Comments