கோவையில் அதிகாலை கொடூரம்! - காதல் ஜோடிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

     -MMH
     கோவையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ரயில் முன்பு காதல் ஜோடிகள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். உடல்கள் சிதைந்து துண்டு துண்டானது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- "இன்று அதிகாலை 3 மணி அளவில் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது இருகூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது காதல் ஜோடிகள் இருவர் ரயில் முன் பாய்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் உடல்கள் துண்டு துண்டாக தூக்கி வீசப்பட்டு பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்து போயின. 

இன்று 4:30 மணி அளவில் அந்த பகுதியில் வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதல்கட்ட விசாரணையில் இருவரும் காதல் ஜோடிகள் என்பது தெரியவந்துள்ளது. எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கோவை வந்தார்கள்? ஊர், பெயர், விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை கோவையில் பரபரப்பையும் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- சீனி,போத்தனூர்.

Comments