மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்யும், வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 28ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மாவட்ட கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக உணரப்படும். நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் ஒட்டன்சத்திரம் பென்னாகரம் தர்மபுரியில் 6 செ.மீ. ராசிபுரம் வேடசந்துார் 5; நடுவட்டம் எருமைப்பட்டி 4 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-ஸ்டார் வெங்கட்.
Comments