தேங்கியிருக்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதி.! கண்டுகொள்ளாத மாநகராட்சி..!!

 -MMH

 
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியிலும் அதன் அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியிலும் பாதாளச்சாக்கடை வடிகால் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் வீடுகளிலிருந்து வரும் சாக்கடை நீரும்,  மழைநீரும் தேங்கியும், திடக்கழிவுகளும் அதில் கொட்டப்படுவதால் அந்தப்பகுதியில் கடுமையான துர்நாற்றமும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு பொதுமக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த சாக்கடையை நீரை சுத்தம் செய்து தரவேண்டும் அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments