ஊட்டி மலை ரெயில்கள் இன்று முதல் ரத்து!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால், தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊட்டி மலை ரெயில்கள் 21--ந்தேதி (இன்று) முதல் ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி மேட்டுப்பாளையம்- ஊட்டி சிறப்பு ரெயில் (06136), ஊட்டி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் (06137), குன்னூர் - ஊட்டி சிறப்பு ரெயில் (06138), ஊட்டி -குன்னூர் சிறப்பு ரெயில் (06139), குன்னூர் - ஊட்டி சிறப்பு ரெயில் (06141), ஊட்டி - குன்னூர் சிறப்பு ரெயில் (06140), குன்னூர் - ஊட்டி சிறப்பு ரெயில் (06143), ஊட்டி - குன்னூர் சிறப்பு ரெயில் (06142) ஆகியவை 21-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments