கோவை துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது!!
கோவை துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் துடியலூர் மினி பஸ் நிறுத்தும் இடத்தின் அருகில் மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளது, இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவமனையும் உள்ளது.
துடியலூர் கணுவாய் செல்ல இதுவே பிரதான வழியாகும். இதனால், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
-கண்ணன், துடியலூர்.
Comments