கொரோனா காலத்தில் அயராது உழைக்கும் வால்பாறை போலீஸ்!! மக்கள் பாராட்டு..!!

  -MMH 

வால்பாறை வட்டார பகுதிகளில் இன்று ஊரடங்கு முன்னிட்டு, நேற்றும், இன்றும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த பேரிடர் காலத்தில் தங்களது உயிர்களை துச்சமாக எண்ணி மக்களுக்காக பணியாற்றி வரும் காவல்துறையினரையும் மாநகராட்சி ஊழியர்களையும் முன்கள பணியாளர்களையும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களையும் வால்பாறை பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள். 

அதேபோல் இன்று வால்பாறையில் முழு கடையடைப்பு என்பதால் வியாபாரிகளும், வால்பாறை பொதுமக்களும் தமிழக அரசு அறிவித்த இந்த ஒரு நாள்  ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யகுமார், ஈசா.

Comments