படிக்கட்டை சரிசெய்து தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை!!

     -MMH

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இருக்கும் பஜார் படிக்கட்டுகளை சரி செய்து தர வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியான முடீஸ் பஜார் பகுதியில் படிக்கட்டுகள் உடைந்து காணப்பட்ட நிலையில், அங்கு பயணிக்கும் மக்கள் அச்சத்துடன் ஏறி நடந்து சென்று வருகின்றனர்.

சில நேரங்களில் தடுமாறிக் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. படிக்கட்டு இடுக்கில் பாம்பு போன்ற விஷ பூச்சிகளும் இருப்பதால் அங்கு பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில், ஈசா

Comments